சோலே மசாலா
தேவையானவை:
வெள்ளைக் கொண்டைக்கடலை – ஒரு கப், வெங்காயம், தக்காளி – தலா 2,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
பட்டை – சிறிய துண்டு,
கிராம்பு – 2,
கசகசா – ஒரு டீஸ்பூன்,
சன்னா மசாலா பவுடர் – ஒரு டீஸ்பூன், வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் களைந்து வேகவிடவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் வெண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, கசகசா தாளித்து… இஞ்சி – பூண்டு விழுது, தக்காளி, வெங்காயம் சேர்த்து வதக்கி, கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். பிறகு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் கொதிக்கவிடவும். வேகவைத்த கொண்டைக்கடலை, சன்னா மசாலா பவுடர் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கவும்.
குறிப்பு: சப்பாத்தி, பூரி, நாண் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.