கொரட்டூரில் தற்போதைய நிலையில் மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கக்கூடிய ஒரே இ-சேவை மையம் மட்டும்தான் மக்கள் சேவைக்காக இயங்கிவருகின்றது. சமீப காலங்களில் தொடர்ந்து இந்த இ-சேவை மையத்தில், ஆதார் பதிவுக்கு வசதி இல்லை என்று மக்கள் திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.
இங்கே அதிர்ச்சி தரக்கூடிய செய்தி என்னவென்றால் சற்று தொலைவில் உள்ள அம்பத்தூரில் தொடர்ந்து ஆதார் பணி அங்கே உள்ள இ-சேவை மையங்களில் தொய்வில்லாமல் நடந்து வருகின்றது.
தற்போதைய நிலையில் நீங்கள் கொரட்டூர் இ-சேவை மையத்தில் சென்று ஆதார் பதிவுக்கு கேட்டால் பதிவு செய்ய இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்றும், அப்படியே பதிவு வசதி வந்தாலும் அதற்கு 800 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் shock கொடுக்கிறார்கள்.
நீங்கள் அதையும் தாண்டி, ‘உதவுங்களேன்’, ‘அவசரம்’ என்றால், வாருங்கள் உங்களை கொளத்தூர் பகுதியில் இருக்கக்கூடிய ஒருத்தருக்கு அறிமுகப்படுத்துகிறோம், 1200 ரூபாய் கொடுத்தால் போதும் ஆதார் கிடைத்து விடும் என்கிறார்கள்.( கொளத்தூர் தொகுதி விடியல் முதல்வரின் தொகுதி என்பது கூடுதல் செய்தி).
ஆதார் என்பது அடிப்படைத் தேவை என்று ஆனபிறகு 800 ரூபாயும் 1200 ரூபாயும் கண்ணுக்கு தெரியாத சேவை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வாழும் பகுதியில் ஆதார் சேவை இல்லை என்பதும் அப்படி தேவை என்றால் பணம் தரவேண்டும் என்பதும், அதிர்ச்சிக்குரிய ஒன்று தானே !
ஆதார் அதிர்ச்சி!
- அரவிந்த் பாரதி