ரெயின்போ சாலட்
தேவையானவை:
வெள்ளைக் கொண்டைக்கடலை – ஒரு கப், கேரட் துருவல் – கால் கப்,
மாதுளை முத்துக்கள் – கால் கப், வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் – தேவைக்கேற்ப.
செய்முறை:
வெள்ளைக் கொண்டைக்கடலையை முதல் நாள் இரவே ஊறவிடவும். மறுநாள் நீரை வடியவிட்டு களையவும். வெங் காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலை, கேரட் துருவல், மாதுளை முத்துக்கள், நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயம், தக்காளி, உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து பரிமாறவும்.