
அவிநாசி அருகே அனுமதியின்றி செயல்படும் கிறிஸ்துவ செபக்கூடத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த செம்பியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகரில் அனுமதியற்ற வகையில் கிறிஸ்தவர்கள் செபக்கூட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் மூலம் தீவிரமாக மதமாற்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள். இதற்கு அந்தப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.
கிறிஸ்தவர்களின் நடவடிக்கைகள் மத அமைதியை சீர்குலைப்பதாகக் கூறி அந்தப் பகுதியில் வசிக்கும் தியாகராஜன் என்பவர் கடந்த செப். 4ஆம் தேதி அவிநாசி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் அவிநாசி தாசில்தார் ராஜேஷ் செப்.7ஆம் தேதி இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சு நடத்தினார்.
அனுமதியின்றி கட்டடம் கட்டி அதில் உரிய அனுமதி பெறாமல் செபக்கூடம் பயன்படுத்தப் பட்டது விசாரணையில் தெரியவந்தது. இவ்வாறு அனுமதியின்றி, பிரார்த்தனை நடத்த செபக்கூடத்தை பயன்படுத்தக் கூடாது என தாசில்தார் கிறிஸ்துவர்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இருப்பினும், தாங்கள் போட்ட ஓட்டுப் பிச்சையால் ஆட்சிக்கு வந்ததாக விடியல் அரசை கிறிஸ்தவர்கள் நம்பிக் கொண்டு இருப்பதால், அரசுத் தரப்பு உத்தரவுகளை மதிக்கவில்லை. கடந்த இரண்டு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் முன்பை விட அதிக அளவில் பிரசாரத்துக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டு, செபக்கூடத்தில் பிரார்த்தனை நடந்து வருகிறது.
இதனால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நேரு நகர் குடியிருப்புவாசிகள், கிறிஸ்தவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வீடுகள் முன் ஞாயிற்றுக்கிழமை கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.