மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் தனியார் நிறுவனத்தில் இருந்து இந்த வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 5 முதல் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் அதிகபட்சம் ரூ.35,000 வரை உதவித்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பத்தாரர்கள் வயது இருக்க வேண்டியது அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Construction Welder பணிக்கு என மொத்தம் 450 இடங்கள், Grinder – Hand And Hand Held Power Tools பணிக்கு என மொத்தம் 450 இடங்கள் , Rigger Precast Erection பணிக்கு என மொத்தம் 200 இடங்கள், Construction- Electrician பணிக்கு என மொத்தம் 400 இடங்கள் என மொத்தம் 1500 இடங்கள் காலியாக உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
இந்த பணிகள் நடைபெறும் தமிழகத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் வேலை வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.
For More Detalis: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in), Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in), Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)