சுகப் பிரசவத்திற்கு…
மாவதி மார்ச் செடியின் வேரை சுத்தம் செய்து கட்டி மோருடன் கலந்து உபயோகிக்க பிரசவ வேதனை குறையும். சுகப்பிரசவமாகும்.
மூத்திரப்பை கற்களுக்கு…
தினமும் இரண்டு பேரிக்காயை சாப்பிட்டு வரலாம் அல்லது காலை மாலை 2 அவுன்ஸ் அன்னாசி சாறு பருகி வர கற்கள் கரைந்து வெளியாகும்.
பித்தக் காய்ச்சலுக்கு…
எலுமிச்சை சாறு, சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு முறை சாப்பிட குணமாகும்.
க்ஷய ரோகத்துக்கு…
தினமும் வேளைக்கு 2 அல்லது 3 சீத்தா பழங்களை மூன்று வேளையும் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் சென்று நீர் அருந்த வேண்டும். சீத்தாப்பழம் கிடைக்காவிட்டால் கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
திடீர் மயக்கத்துக்கு…
மிளகை அரைத்து பசும்பாலில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்கலாம்.
உவர்ந்த திராட்சையை கஷாயம் வைத்துக் கொடுக்க மயக்கம் உடனே! தெளியும்.