மாசிமாசம் புனிதம் நிறைந்த மாதம். பல்வேறு ஆன்மீக சிறப்புகள் நடைபெற்ற மாதமாகவும் மாசிமாதம் இருக்கிறது. காதலால் வள்ளியை முருகன் கரம் பிடித்ததாக இருக்கட்டும். சிவனுக்கு காதில் பிரம்ம ரகசியத்தை சொல்லி தகப்பன் சாமி என்ற பட்டத்தை பெற்றதாகட்டும், முருகனின் பெருமைகளில் நீக்கமற நிலைத்து விட்ட இந்த சம்பவங்கள் நடந்தது மாசிமாதம் மகம் நட்சத்திரத்தில்தான். இரண்யாட்சன் பூமியை சுருட்டிக் கொண்டு பாதாள லோகத்தில் மறைந்தபோது, வராக அவதாரம் எடுத்து பூமியை மீட்டாரே விஷ்ணுபகவான், அந்த சிறப்புமிகு மூன்றாவது அவதாரம் நிகழ்ந்தது மாசி மகநாளில்தான். சிம்மத்தில் குரு கும்பத்தில் சூரியன் இருக்கும்போது சந்திரன் மகம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்நாளைத்தான் மாசி மகாமகம் என்பார்கள். புனித நீராடும் நாள். பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் இறைக்கும் நாள், மாசிமகம்.
இந்த மாசி மகத்திற்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. நம் முன்னோர்கள் மறைந்த திதி தெரியா விட்டால் அல்லது வருடாந்திர திதி தரும் நாள் போய், அந்த நாளும் கடந்து போய் விட்டால், மறைந்தவர்களுக்கான திதியை மறந்த திதியாக மாசி மாதம் மகாமகநாளில் தரலாம் என்பது வேதவாக்கு.
மறந்த திதியை மாசியில் கொடுக்கலாம்
Popular Categories



