காவிரி விவகாரம்: அளவைக் குறைத்து 177.25 டிஎம்சி என உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

Published:

புது தில்லி:

உச்ச நீதிமன்றத்தில் இன்று காவிரி நீர் பகிர்வு தொடர்பான இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில், தமிழகத்துக்கு கர்நாடகம் 177.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இது, முந்தைய அளவைக் காட்டிலும் குறைவு என்றாலும், இதுவரை நீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக அரசு நீர் வழங்கியதில்லை.

காவிரி நதி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகத்துக்கு இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக முடிவெடுக்க, காவிரி நடுவர் மன்றம் 1990ல் அமைக்கப்பட்டது.

காவிரி நடுவர் மன்றத்தில் நீண்ட காலமாக நடந்து வந்த வழக்கில், 2007ல் இறுதித் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான அனைத்து மனுக்களையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அமித்தவ ராய், ஏ.எம்.கன்வில்கர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் 2017 செப். 20 ல் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து, தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதுவும் மேல் முறையீடு செய்ய இயலாத இறுதித் தீர்ப்பு என்பதால், இது குறித்து பலத்த எதிர்பார்ப்பும் பரபரப்பும் நிலவி வந்தது. இரு மாநில சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டன.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி நீரை தமக்கு என உரிமை கோர எந்த மாநிலத்துக்கும் உரிமையில்லை. காவிரியில் தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு கட்டாயம் தர வேண்டும். தமிழகத்தில் 20 டி.எம்.சி., அளவுக்கு நிலத்தடி நீர் உள்ளது. பாசன வசதியைப் போல் குடி நீருக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். எனவே, கர்நாடகாவிற்கு முன்பு ஒதுக்கீடு செய்திருந்ததை விட கூடுதலாக 14.75 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும்.

கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என முன்னர் ஒதுக்கீடு செய்து அறிவித்ததில் எந்த மாற்றமுமில்லை என்று உத்தரவிட்டுள்ளது.

மேலும், குடியரசுத் தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த முறை, தமிழகம் 264 டிஎம்சி தண்ணீர் கேட்டிருந்த நிலையில், உச்ச நீதிமன்றம், ஏற்கெனவே அறிவித்திருந்த தண்ணீரின் அளவை குறைத்து உத்தரவிட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு 192 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இருப்பினும், கர்நாடகம் அந்த அளவுக்கு முழு அளவிலான தண்ணீரை காவிரியில் திறந்து விட்டதில்லை. ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணம் சொல்லி அளவைக் குறைத்தே திறந்து விட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் 177.25 டிஎம்சி என்ற அளவை உறுதி செய்துள்ளது. இந்த அளவையாவது கர்நாடகம் இனி வழங்குமா என்பது பலரின் ஆதங்கம். காரணம், தமிழகம் இந்தத் தீர்ப்பால் வஞ்சிக்கப் பட்டதாகத் தான் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும்,

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img