லஞ்ச் பாக்ஸ் கார்னர்: காலிஃப்ளவர் ஃப்ரைடு ரைஸ்!

Published:

Cauliflower Fried Rice - 2026

காலிஃபிளவர் ப்ரைடு ரைஸ்
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி – 1 கப் (உதிரியாக வடித்தது)
காலிஃபிளவர் – பூக்களாக பிரித்தது 1 கப்
பச்சை பட்டாணி – 1/4 கப்
பச்சைமிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 2 பல்
நெய் – 1/4 தேக்கரண்டி
எண்னெய் – 1/4 தேக்கரண்டி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 1
பிரியாணி இலை – 1
உப்பு – தேவைகேற்ப
கொத்தமல்லி இலை – கொஞ்சம்

செய்முறை
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதில் உப்பும் போட்டு காலிஃப்ளவரையும் பச்சை பட்டாணியையும் போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும், குழைய கூடாது.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கொத்தமல்லி இலை கொஞ்சம் எல்லாம் ஒன்றாக அரைத்து வைக்கவும்.
கடாயில் கொஞ்சம் நெய் & எண்ணெய்ய் விட்டு அதில் வாசனை மசாலாக்களை போட்டு பின் அரைத்த மசாலா விழுதையும் போட்டு, வெந்த காலிஃப்ளவரையும் போட்டு நன்றாக வதக்கவும்.
பச்சை மணம் போன பின் அதில் வேகவைத்துள்ள சாததையும் போட்டு நன்றாக கலக்கவும்.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

இந்த ரைஸ் மைல்டாக இருப்பதால் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.
இதில் வெங்காயம், குடமிளகாய் நீளமாக வெட்டி சேர்க்கலாம்.

Related articles

Recent articles

spot_img