அஹ்மத்கான் இயக்கத்தில் டைகர் ஷராப்புடன் இணைந்து ஷ்ரத்தா கபூர் நடித்து மார்ச் 6-ந்தேதி வெளியான ஹிந்தி படம் பாகி-3.
இந்த படத்தில் ஸ்ரத்தா கபூரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் கிடைத்தபோதும், அவரது உடல்கட்டு முந்தைய படங்களைப்போல் இல்லை.
அவர் உடம்பை பராமரிப்பதை விட்டு விட்டதாக தெரிகிறது என்றும் சில ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கருத்து கூறினார்களாம்.இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரத்தா கபூர், அந்த படத்தில் தான் அணிந்த சில உடைகள் தான், தனது உடல் அழகை சரியாக வெளிப்படுத்தவில்லை என்று அவர்களை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதோடு நில்லாமல், தனது சரியான உடல் வடிவத்தை காட்டும் ஒரு ஹாட் போட்டோவையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார்