விருதுநகரில் வெள்ளிக்கிழமை இன்று பாரதமாதாவின் திருக்கோயில் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு நிகழ்ச்சியில் இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் கலந்து கொண்டார். பாஜக., மற்றும் இந்து இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
வி௫துநகர் அ௫கே நாராயணபுரத்தில் தமிழகத்திலேயே உயரமான (30 அடி) பாரதமாதா சிலை நிறுவப்பட்டு பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் சீனிவாசன் மற்றும் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் ஆகியோர் தலைமையில் இன்று குடமுழுக்கு நடத்தப்பட்டது.
தருமபுரி அருகே உள்ள பாப்பாரப்பட்டியில் பாரதமாதாவுக்கு கோயில் எழுப்புவதும் ஆசிரமம் அமைப்பதும், சுதந்திரப் போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவாவின் கனவுகளில் ஒன்று. அந்தக் கனவை நிறைவேற்ற, பல்வேறு ஊர்களிலும் பாரதமாதா கோயில் அமைத்து வருகிறார்கள்.