உறக்க நாள்: தூக்கம் வராதவர்கள் யார் யார் தெரியுமா?

Published:

05 Oct24 sleeping - 2026

உறக்கம் வராதவர்கள் யார் யார்?
யார்யாருக்குத் தூக்கம் வருவதில்லை?

மகாபாரதத்தில் விதுரர் கூறுகிறார்.

“அபியுக்தம் பலவதா துர்லபம் ஹீனசாதனம் !
ஹ்ருதஸ்வம் காமினம் சோரம் ஆவிசந்தி ப்ரஜாகரா !!

பொருள்: மகாராஜா! பலசாலியோடு விரோதம் செய்து கொண்டவன், பிரச்சினையை தீர்த்துக் கொள்ளும் சாமர்த்தியம் இல்லாதவன், செல்வத்தை இழந்தவன், தீராத கோரிக்கை உள்ளவன், திருட்டுத்தனம் செய்பவன்… இந்த ஐந்து வித மனிதர்களுக்கும் உறக்கம் வராது.

உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு அளிப்பது உறக்கம். தூங்காமல் இருப்பது நோயின் அறிகுறி. எத்தனை வசதியான படுக்கை அறையாக இருந்தாலும் பட்டு மெத்தை மேல் படுத்து இருந்தாலும் சிலருக்கு உறக்கம் வருவதில்லை.

யார் யாருக்குத் தூக்கம் வருவதில்லை என்று மகாபாரதத்தில் விதுரர் இந்த ஸ்லோகத்தில் அது குறித்து விவரிக்கிறார்.

இந்த பட்டியலில் சேராமல் கவனமாக இருப்பவர் உறக்கமின்மையால் அவதிப்படாமல் ஆரோக்கியமாக இருப்பார்.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img