அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடுவிற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் அதிமுக., எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் ஸ்டாலின்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக, அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.
அதன்படி அவர் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும், குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம், ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.