இன்று ராஜினாமா செய்கிறார் அதிமுக எம்.பி முத்துகருப்பன்…!

Published:

cauvery 1 - 2026

அதிமுக எம்.பி. முத்துக்கருப்பன், இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்ச நீதிமன்றம் விதித்த காலக் கெடுவிற்குள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாத நிலையில் அதிமுக., எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார் ஸ்டாலின்.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளதாக, அதிமுக எம்.பி முத்துக்கருப்பன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

அதன்படி அவர் இன்று ராஜினாமா செய்ய உள்ளதாகவும், குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவை தலைவருமான வெங்கய்ய நாயுடுவிடம்,  ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img