இட்லி மாவு போண்டா
தேவையான பொருட்கள் :
இட்லி மா – 1கப்
மைதா மா – 1கப்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 2
சமையல் சோடா – ஒருசிட்டிகை
எண்ணெய் – பொரிக்கசெய்முறை :
வெங்காயம் பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். மைதா மா, இட்லி மா கலந்து சமையல் சோடா போட்டு,அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை கலந்து, எண்ணயைக் காய விட்டு கையால் கிள்ளி போடவும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு : புளித்த மாவிலும் செய்யலாம்.