நீ தமிழனா இருந்தா ஷேர் பண்ணு…! சென்னை போலீஸின் வித்தியாச வீடியோ!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

good netizen good citizen - 2026

ஆக.16 வெள்ளிக் கிழமை அன்று வேப்பேரி காவல் ஆணையரகம் 2வது தளத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில், Good Netizen, Good Citizen என்ற விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகட்டினை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அ.கா.விசுவநாதன் வெளியிட முருகப்பா குரூப்பின் நிர்வாக தலைவர் எம்.எம்.முருகப்பன் பெற்றுக்கொண்டார்.

வாட்ஸ் அப் மூலம் படம் அனுப்புவது… இளைய தலைமுறையினருக்கு இருக்கும் ஆர்வக் கோளாறால்… இருவருக்கு இடையே ஷேர் ஆகும் படங்களை எப்படி பயன்படுத்தி பிரச்னைக்குரியதாக மாற்றுகிறார்கள் என்பதை பதியவைக்கிறார்கள்.

இதத்தானங்க நெட்டிலயும் பண்றீங்க… நேர்ல செய்ய மாட்டேனுனா.. நெட்டுல செய்ய மாட்டேன்… என்று உறுதி மொழி எடுக்க வைக்கிறார்கள்.

net police video - 2026இரண்டாவது தொகுப்பில், பணத்தைச் சேர்த்து வைத்து இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, எல்லோரிடமும் சாவியைக் கொடுத்தால் எப்படி திருடு போக நாம் காரணமாக இருப்போமோ அது போல், பேங்க் அக்கவுண்ட் கிரெடிட் கார்டு, பேங்க் வெரிபிகேஷன்.. என்றெல்லாம் வரும் போன் கால்களுக்கு நாம் பதில் சொன்னால் என்ன ஆகும் என பதிய வைக்கிறார்கள்.

அடுத்து, சமூகத் தளங்களில் எதையும் ஷேர் செய்து, அதன் மூலம் பிரச்னையை கிளப்புவதால் என்ன ஆகும் என்பதை பதியவைக்கிறார்கள். நீ தமிழனா இருந்தா ஷேர் பண்ணு.. நீ இந்தியனா … நீ ஓவியா ஆர்மியா… என்றெல்லாம் கேட்டு கவர்ந்திழுப்பதும், குழந்தைக்
கடத்தல்காரன்….குறித்த செய்திப் பகிர்தலும் என ஷேர் செய்யப் படுவதில் உள்ள தவறுகள்…
இதத்தான ப்ரோ நெட்டிலயும் செய்யறீங்க.
என்று மூன்று தகவல்களை உள்ளடக்கி முருகப்பா
குழுமத்துடன் சென்னை மாநகர காவல்துறை இந்தக் குறும்படத்தை வெளியிட்டிருக்கிறது.

இதன் மூலம் ஒரு விழிப்பு உணர்வு வருமா என்று பார்ப்போம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.