
திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது எனவும், மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே கொரோனாவால் உயிரிழந்த மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுரளி மறைவுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து போலீசாரும் சமூக இடைவெளியுடன் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். சென்னை வேப்பேரியில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியபோது…
பொதுமுடக்க உத்தரவுக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பொதுமுடக்க நாட்களில் சென்னைக்கு வெளியே தினசரி வேலைக்கு சென்று வர அனுமதி கிடையாது.

வெளியே இருந்து சென்னைக்கு வருபவர்கள் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.
முகக்கவசம் இல்லாமல் வெளியே வருவோர் மீதும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்கும்.
காய்கறி, மளிகை பொருட்களை அருகிலிருக்கும் கடைகளிலேயே வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பொருட்களை வாங்க வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்படாது.
மத்திய, மாநில அரசு அலுவலக பணியாளர்களை அடையாள அட்டை வைத்துக்கொள்ள வேண்டும்.
திருமணம், மருத்துவம் தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் செல்லாது. மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே இ-பாஸ் பெற்றவர்கள் புதுப்பிக்க வேண்டும்.
போலி இ-பாஸ் மூலம் செல்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதி இல்லாமல் செல்பவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
சென்னையின் உள்பகுதிகளிலும் சோதனையை தீவிரப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் அண்ணாசாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் மூடப்படும். சென்னை நகருக்குள் மட்டுமே 288 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் டிரோன் கேமராக்கள் மூலம் வெளியே சுற்றுபவர்களை கண்காணிப்போம். கொரோனாவுக்கு 788 காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நிலையில், 300க்கும் மேற்பட்டோர் குணமடைந்து பணிக்கு திரும்பினர்… என்றார்.
- போலி இ-பாஸ் பயன்படுத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்
- *நாளை முதல் சென்னையில் அண்ணா சாலை மூடப்படும். அத்தியாவசிய வாகனங்கள் மட்டுமே சோதனைக்கு பின் அனுமதிக்கப்படும்.
- *சென்னை மாநகருக்குள் 288 சோதனை சாவடிகள் அமைப்பு .
- தேவையின்றி வெளியில் வருவோரை கண்காணிக்க ட்ரோன் பயன்படுத்தப்படும்.
- வழக்கமான போக்குவரத்திற்கு சென்னை சாலைகளில் அனுமதியில்லை
- பணியாளர்கள் தினசரி சென்னை எல்லையை விட்டு வெளியேற அனுமதியில்லை *
- அனுமதிக்கப்பட்ட 33% ஊழியர்களுக்கு அடையாள அட்டை போதுமானது. -சென்னை காவல்துறை ஆணையர்