ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது… எட்டாம் கிளாஸ் பையனாம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை
rajini speech kamal function
rajini speech kamal function

நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக நேற்று பரபரப்பான செய்திகள் வெளியாகின. கொரோனா வைரஸ் தொற்று பரவல்  குறித்த செய்திகளுக்கு மத்தியில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த செய்தியும் சேர்ந்து கொண்டது.  இந்நிலையில் அது வெறும் புரளிதான் என்று போலீஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை  போலீசார் கண்டுபிடித்தனர். ஆனால் அந்த நபரை கண்டதும் போலீசார் சற்று அரண்டு போயினர் காரணம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஆம்

கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவன்  தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்று தகவல் தெரிவித்த போலீசார் 108 அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்திருந்தார்  என்றும் தெரிவித்தனர்

தனது போனில் அழைப்புகள் எதுவும் போகாத நிலையில் 108க்கு  அந்த மாணவர்  போன் செய்துள்ளாராம். மேலும், மாணவனுக்கு சற்று மனநலம் பாதிக்கப் பட்டிருப்பதாகவும்  விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.