ஏப்ரல் 22, 2021, 6:51 மணி வியாழக்கிழமை
More

  கொரோனா டைம்… எங்களுக்கும் வருமானமே இல்ல.. அதான் கூட ரேட்டு! டாஸ்மாக் பணியாளர் ‘பகீர்’!

  பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆர்கி உள்ளார்! இந்த வீடியோ தற்போது சமூகத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  tasmac-bottle
  tasmac-bottle

  கொரோனா காலம்… எங்களுக்கும் வருமானமே இல்லை… அதனால்தான் கூடுதல் விலைக்கு விற்கிறோம்… என்று டாஸ்மாக் கண்காணிப்பாளர் அளித்த பதிலால் மது பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மதுக் கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது,

  இந்த நிலையில் மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் உள்ள கடை எண் 5169 – என்ற கடையில் தொடர்ந்து மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் எழுந்தது! இந்நிலையில் மது பிரியர் ஒருவர் அந்தக் கடைக்கு மது வாங்கச் சென்றபோது கொரோனா காலத்தில் வருமானம் இல்லை… இப்படி மதுபாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வைத்து விற்பனை செய்வது நியாயமா? எனக் கேட்டார்.

  அதற்கு கொரோனா காலம் எங்களுக்கும் தான்! அதான் வருமானம் இல்ல ! என்ன செய்யிறது…?! அதனாலதான் பத்து ரூபாய் கூடுதலாக வாங்குறோம் என டாஸ்மாக் கடையின் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

  இது, மதுப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! மதுக்கடைகளில் உரிய விலைக்கு விற்பனை செய்ய வேண்டும் ரசீது வழங்க வேண்டும் என அரசு அறிவித்த நிலையில், கொரோனா காலம்… வருமானமே இல்ல… என்று கூறி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக கண்காணிப்பாளர் கூறியது மது பிரியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

  வெறுத்துப் போன அந்த மதுப் பிரியர் இந்த நிகழ்வை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆர்கி உள்ளார்! இந்த வீடியோ தற்போது சமூகத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  அந்த வீடியோ பதிவு…

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »