
- ஆந்திர முதல்வர் ஜகனின் சகோதரி தெலங்காணாவில் புதுக் கட்சி தொடங்குகிறார்.
- ஜெகனின் சகோதரி ஒய்எஸ் ஷர்மிளா புது கட்சி தொடங்குவதற்கு முகூர்த்தம் குறித்துள்ளார்.
- ஷர்மிளா சொந்த கட்சி ஆரம்பிக்கப் போகிறார் என்று வரும் பிரச்சாரம் உண்மையே என்பது உறுதியானது
செவ்வாய்க் கிழமையன்று ஆந்திர முதல்வர் ஜெகன் சகோதரி ஷர்மிளா, புதுக் கட்சிக்கு அடித்தளம் போட்டார். இது தொடர்பாக ‘லோட்டஸ் பாண்ட் ‘டில் ஷர்மிளாவின் கணவர் பிரதர் அனில் அலுவலகத்தில் ஷர்மிளா முக்கியக் கூட்டம் நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்கு வரும்படியாக பலருக்கு அழைப்பு அனுப்பப் பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டியின் ஆதரவாளர்களோடு கூட ஷர்மிளாவின் ஆதரவாளர்களும் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டதால், ஏற்பாடுகள் தடபுடலாக இருந்தது.
தன் தந்தை ஒய்எஸ் ராஜசேகர் ரெட்டி தெலங்காணா மக்களுக்கு என்ன செய்ய விரும்பினாரோ அவற்றை தான் நிறைவேற்ற இருப்பதாக ஷர்மிளா ஏற்கெனவே பல இடங்களில் கூறி வருகிறார்.

முதலில் தெலங்காணாவில் நல்கொண்டா மாவட்டத் தலைவர்கள் ஷர்மிளா கலந்து பேச உள்ளார்.
சிஎம் ஜகன் வேறு… நான் வேறு அல்ல… ஜெகனுடைய பணி அவருடையது. என்னுடைய பணி என்னுடையது.. என்று இந்த நேரத்தில் ஷர்மிளா உறுதியுடன் கூறினார்.
தெலங்காணாவில் ‘ராஜன்னா ராஜ்ய’த்தை எடுத்து வருவேன் என்று லோட்டஸ் பாண்டில் உள்ள தன் இருப்பிடத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில், முக்கிய தலைவர்களோடு உரையாடிய போது குறிப்