பிப்ரவரி 25, 2021, 5:26 காலை வியாழக்கிழமை
More

  இரட்டை குழந்தை பிறந்திருக்கு.. கர்ப்பம் ஆகாமலே கணவனை ஏமாற்றிய பெண்!

  Home சற்றுமுன் இரட்டை குழந்தை பிறந்திருக்கு.. கர்ப்பம் ஆகாமலே கணவனை ஏமாற்றிய பெண்!

  இரட்டை குழந்தை பிறந்திருக்கு.. கர்ப்பம் ஆகாமலே கணவனை ஏமாற்றிய பெண்!

  pregnant women 1

  தனது கணவனின் சந்தோஷத்திற்காக கர்ப்பமே ஆகாத பெண் இரட்டை குழந்தை பிறந்ததாக கூறி கணவனை ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

  ரஷ்யாவை சேர்ந்த டவ்வுட் டுடோவ் என்ற 33 வயது நபருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் சந்தோஷம் அடைந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

  8 மாதமாக இருக்கும் போது மருத்துவமனையில் சேர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு நாள் கணவருக்கு போன் செய்து “நமக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டும் பிறந்து இறந்து விட்டது.

  மருத்துவர்கள் உடனே புதைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். என கணவருக்கு கூறியுள்ளார். கணவர் வந்து பார்க்கும் போது கல்லறையில் துணிகள் சுற்றி இரண்டு குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

  துணியைப் பிரித்துப் பார்த்தால் இரண்டு பொம்மைகள் அதிர்ந்து போன கணவர் மருத்துவர்களை குற்றம் சாட்ட .. பின்னர் தான் மனைவி கர்ப்பம் ஆனதே பொய் என்று தெரியவந்துள்ளது.

  முதலில் அவரும் கர்ப்பம் என்றே நினைத்தாராம் நான்கு மாதங்கள் கழித்தே கர்ப்பம் இல்லை என்று தெரிந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு அருகில் வீடெடுத்து தங்கியுள்ளார். கணவனிடம் மருத்துவமனையில் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றியுள்ளார்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari