வயலுக்கு செல்ல ஹெலிகாப்டர் தாங்க.. ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய பெண்! வைரல்!

இந்தியா சற்றுமுன்
letter-1
letter-1

மத்திய பிரதேசத்தின் மாண்ட்சர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், ஹெலிகாப்டர் வாங்க கடன் வழங்குமாறு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை மத்திய பிரதேசத்தின் மாண்ட்சர் மாவட்டத்தில் உள்ள பார்கேடா கிராமத்தில் வசிக்கும் பசந்தி பாய் எழுதியுள்ளார்.

பக்கத்து வயலின் உரிமையாளர் அந்த பெண்ணின் வயலுக்கு போகும் வழியை தடுத்ததால் அவரால் அந்த பண்ணைக்குக்கு போக இயலவில்லை. இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த முடிவிற்கு வந்துள்ளார்.

letter-to-President-1
letter-to-President-1

தனது பிரச்சினையை தீர்க்குமாறு கோரி ஜனாதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தின் படத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார், அது பின்னர் வைரலாகியது.

“சாலையை தெளிவுபடுத்துவதற்கு அதிகாரிகள் எனக்கு உதவவில்லை என்றால், அவர்கள் எனக்கு ஒரு ஹெலிகாப்டரை வழங்க வேண்டும்” என பசந்தி பாய் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

இந்த கடிதம் இதுவரை ஜனாதிபதிக்கு அனுப்பப்படவில்லை, ஆனால் சமூக ஊடகங்களில் உலா வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.