சேலம் – சென்னை ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ரூ.5.75 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பின் துப்பு துலங்கியது..!
ரூ. 5.78 கோடி ரயில் கொள்ளை விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி-க்கு கைகொடுத்தது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம். சேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் 350 கி.மீ.தூரத்தை செயற்கை கோள் மூலம் புகைப்படங்களாக அனுப்பியது நாசா.
மத்திய உள்துறை அமைச்சகம் மூலமாக நாசாவுக்கு சிபிசிஐடி வைத்த கோரிக்கையை ஏற்று படங்களை அனுப்பியது. ரயிலில் வங்கி பணம் ரூ.5.78 கோடி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி கொள்ளையடிக்கப்பட்டது.
இரண்டு ஆண்டுகளாகியும் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில் வழக்கில் முன்னேற்றம். நாசா படங்களின் அடிப்படையில் 100 க்கும் மேற்பட்ட செல்போன் டவர்களின் அழைப்புகளில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
ஆய்வின் முடிவில் சி.பி.சி.ஐ.டி விசாரணை வளையத்துக்குள் 11 பேர் கொண்டு வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.





