நெல்லையில் சனிக்கிழமை… பைந்தமிழ் மன்றம் பெயரில் பாளையங்கோட்டை CSI கிறிஸ்தவ நூற்றாண்டு மண்டபத்தில் கிறிஸ்தவ பாதிரி கால்டுவெல் புகழ்பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அன்னை ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரை தரம் தாழ்ந்து பேசிய வய்யிர முத்து மோகன் சி. லாசரஸ் ஆல் கிறிஸ்தவர் என அடையாளம் காட்டப்பட்ட *வைகோ* ஆகியோர் பேசினர்.
என்ன பேசினார்கள் எப்படி பேசினார்கள் கால்டுவெல் அப்பாவி இந்துக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்ததை, மதிப்பிற்குரிய நாடார் சமூகத்தை வந்தேறிகள் என திருநெல்வேலி கெசட்டில் கால்டுவெல் எழுதியதை எல்லாம் பேசினார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
நிகழ்ச்சி முடிந்து சரக்கு பாட்டிலுடன் சிற்றுண்டி டப்பா குப்பைகள் எல்லாம் எதிரில் நேருஜி திடலில் கொட்டி நல்லாயிருக்கும் மைதானத்தை அசுத்தப்படுத்தியது தான் மிச்சம்.
CSI நூற்றாண்டு மண்டப கிறிஸ்தவ நிர்வாகிகளுக்கு வாசலில் உள்ள குப்பையை தொட்டியை கடந்து சுவரைத் தாண்டி நேருஜி கலையரங்க மைதானத்தில் குப்பையை வீச தெரிகிறது. ஆனால் சுற்றுப்புற சுகாதாரம் என பாதிரிகள் கலெக்டருடன் சுத்தம் செய்வது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால் நெல்லையில் நடந்த நிகழ்ச்சிக்கு தின்பண்டங்கள் சென்னையிலிருந்து வந்துள்ளது. வய்யிரமுத்தோ வைகோவோ கூட்டத்திற்கு ஆள் சேர்க்க கைக்காசு போட்டு வாங்கி வந்திருப்பார்களோ என சுத்தம் செய்தவர்கள் நகைச்சுவையாக பேசிக்கொண்டது உண்மையாக கூட இருக்கலாம்.
கடைசியில் கிறிஸ்தவ பாதிரி துதி பாடிய கிறிஸ்தவர்கள் அல்லாத கிறிஸ்தவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியால் மைதானத்தில் வீசி எறிந்த மது பாட்டில்களையும் குப்பைகளையும் சுத்தம் செய்தது என்னவோ.. RSS தொண்டர்கள்தான்!
ஸ்வச் பாரத் – தேசத்தை சுத்தம் செய்கிறது – இது தாங்க ஆர்.எஸ்.எஸ் !
– கா.குற்றாலநாதன்




