காஷ்மீரில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர்கள் வீரவணக்கம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை லைஃப் ஸ்டைல்

martyr trichy nirmala sitharaman - 2026காஷ்மீர் மாநிலம் புல்வாமோ மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய ஜெய்ஷ் இ மொஹக்கத் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் இருவரின் உடல்கள் தில்லியிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன.

martyr trichy tn - 2026

திருச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட தமிழக வீரர் சிவச்சந்திரன் உடலுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று வீர வணக்கம் செலுத்தினார்.

புல்வாமா தாக்குதலை கண்டித்து, உயிரிழந்த வீரர் சுப்பிரமணியனின் சொந்த ஊரான சவலாப்பேரி கிராமத்தில் பயங்கரவாதியின் உருவப் படம் மற்றும் பாகிஸ்தான் கொடி எரிக்கப் பட்டது.

martyr trichy ponnar - 2026

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி சுப்பிரமணியன் உடல் விமானத்தில் மதுரை வந்தது. சுப்பிரமணியன் உடலுக்கு பொன்.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் நடராஜன் அஞ்சலி செலுத்தினர்.

இதனிடையே, வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.