சிதம்பரம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்த இளைஞரின் சடலத்தை எலி கடித்து குதறியதால் பரபரப்பு. மருத்துவர்கள் அலட்சியமாக பேசியதாக நண்பர்கள் குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனையில் சடலங்களுக்கு பாதுகாப்பில்லை என புகார்.

சிதம்பரத்தை அடுத்த தண்டேஸ்வர நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வைத்தீஸ்வரன்(22). பட்டதாரி இளைஞரான இவர் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் சிதம்பரம் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வைத்தீஸ்வரனின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவமனையின் சவக் கிடங்கில் வைத்தீஸ்வரனின் சடலம் வைக்கப்பட்டது.

இதையடுத்து இன்று பிரேத பரிசோதனைக்காக வைத்தீஸ்வரனின் சடலம் சவக்கிடங்கில் இருந்து வெளியே எடுக்கப்பட்டது. அப்போது சடலத்தின் மூக்கை எலி கடித்து குதறி இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இதுகுறித்து சிதம்பரம் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் மருத்துவர்கள் இதை அலட்சியப்படுத்தி பேசியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கூறிய வைத்தீஸ்வரனின் நண்பர்கள், நேற்று உயிரிழந்த நண்பரின் சடலத்தை இன்று பார்த்தபோது மூக்கை எலி கடித்து குதறி இருந்ததாகவும், இதுபற்றி டாக்டர்களிடம் கேட்டபோது அலட்சியமாக பதிலளித்ததாகவும் குற்றம் சாட்டியவர்கள், இறந்து விட்டார் என்பதால் அந்த உடலை பாதுகாப்பு இல்லாமலா வைப்பார்கள். அதனால் இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் கூறினர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...