23/09/2019 4:06 PM

செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை

சேலம்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அம்மாவின் உண்மை விசுவாசி அவர் திமுகவில் இணைய வாய்ப்பில்லை என சேலத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் கூறினார்.

நாங்கள் விலகியதாக பொய்யான தகவலை பரப்பி அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த அதிமுகவினர் முயற்சி செய்கின்றனர் என குற்றம்சாட்டினார் …

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சேலத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்காக நேற்று மாலை சேலத்திற்கு வருகை தந்தார். அவருக்கு சேலம் ஏவிஆர் ரவுண்டானாவில் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார், அப்போது முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜியும் நீங்களும் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைய உள்ளதாக சில நாளிதழ்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருவதாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இது முற்றிலும் தவறான தகவல் எனவும் அமமுகவிலிருந்து நாங்கள் விலகுவதாக இதுவரை நாங்கள் யாரும் தெரிவிக்கவில்லை,

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வளர்ச்சியை பொறுக்காத அதிமுகவினர் அமமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தவே இப்பேர்ப்பட்ட பொய்யான தகவல்களை பரப்பி வருவதாக தெரிவித்தார்.

மேலும் செந்தில் பாலாஜியும் நானும் அம்மாவின் உண்மை விசுவாசிகள் ஆதலால் என்றும் சின்னம்மா வழியில் அமமுகவில் நீடிப்போம் எனவும் தெரிவித்தார்.

மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழக மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அனுமதித்ததே இல்லை. ஆனால் அம்மா வழியில் செயல்படுவதாகவும் மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதாகவும் கூறும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்காக கர்நாடகாவில் புதிய அணையை கட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்காமல் மத்திய அரசு என்ன நினைக்கிறதோ அதையே அவர் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எடப்பாடி அரசு முன்வராது அப்படி வந்தால் அவர்கள் தோற்று விடுவார்கள் அனைத்து தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறும் என்பது அவர்களுக்கே தெரியும் என அவர் தெரிவித்தார்.

Recent Articles

சக மாணவியை அடித்து உதைத்த மாணவர்! காதல் மறுப்பு!

படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

செய்திகள்… சிந்தனைகள்… – 23.09.2019

அடிப்படைவாத இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிப்போம்! ஹுஸ்டனில் நடைபெற்ற Howdy-Modi நிகழ்ச்சியில் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் பயங்கரவாத நாடு, 370 ஒழிக்கப்பட்டு காஷ்மீருக்கு விடுதலை, வளர்ச்சிகண்ட...

“இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்)

"இட்லி என்று எப்படி பெயர் வந்தது?”-(தன்னை தரிசனம் செய்ய வந்திருந்த பண்டிதர் ஒருவரிடம் இப்படிக் கேட்டார் மகா சுவாமிகள்). (ஒன்றை வைத்துவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வருவதை இடுதல் என்பார்கள்-பெரியவா விளக்கம்) நன்றி-சக்தி...

காப்பான்… இவன் காப்பான்!

7 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோ இது…!

Related Stories