தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்.. நடைபெறுகிறது.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் வாக்களிப்பு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார் சுனில் அரோரா. தமிழகம் மற்றும் புதுவையில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும்.

தமிழகத்தில் உள்ள 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இது பின்னர் அறிவிக்கப் படும் என்று கூறியுள்ளார் அரோரா. நிச்சயம் அனைத்து தொகுதி இடைத்தேர்தலும் நடைபெறும் என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது
மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் 29ம் தேதி

ஏழு கட்டமாக நடைபெறும் தேர்தல் தேதிகளும் தொகுதிகளும்…

முதல் கட்டம் – ஏப்ரல் 11 – 20 மாநிலங்களில் 91 தொகுதிகளுக்கு…
2 வது கட்டம் – ஏப்ரல் 18 – 13 மாநிலங்களில் 97 தொகுதிகளுக்கு
3 வது கட்டம் – ஏப்ரல் 23 – 14 மாநிலங்களில் 115 தொகுதிகளுக்கு…
4 வது கட்டம் – ஏப்ரல் 29 – 9 மாநிலங்களில் 71 தொகுதிகளுக்கு…
5 வது கட்டம் – மே 06 – 7 மாநிலங்களில் 51 தொகுதிகளுக்கு
6வது கட்டம் – மே 12 – 7 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு
7 வது கட்டம் – மே 19 – 8 மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு… தேர்தல் நடைபெறும்.

எப்போது வாக்குப் பதிவு.. தேர்தல் தேதி.. முழு பட்டியல் இதோ…!

அருணாசல் பிரதேசம்- ஏப்ரல் 11
அஸ்ஸாம்- ஏப்ரல் 11, 18, 23
பீகார் – ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
சத்தீஸ்கர்- ஏப்ரல் 11, 18, 23
கோவா – ஏப்ரல் 23
குஜராத் – ஏப்ரல் 23

ஹரியாணா- மே 12
ஹிமாச்சல் பிரதேசம் – மே 19
ஜம்மு- காஷ்மீர்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6
ஜார்க்கண்ட்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
கர்நாடகம்- ஏப்ரல் 18, 23

கேரளம்- ஏப்ரல் 23
மத்திய பிரதேசம்- ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19
மகாராஷ்டிரம்- ஏப்ரல் 11, 18, 23, 29
மணிப்பூர்- ஏப்ரல் 11, 18
மேகாலயா- ஏப்ரல் 11
மிஸோரம்- ஏப்ரல் 11

நாகாலாந்து- ஏப்ரல் 11
ஒடிஸா- ஏப்ரல் 11, 18, 23, 29
பஞ்சாப்- மே 19
ராஜஸ்தான்- ஏப்ரல் 29, மே 6
சிக்கிம்- ஏப்ரல் 11

தமிழ்நாடு- ஏப்ரல் 18
தெலங்கானா- ஏப்ரல் 11
திரிபுரா- ஏப்ரல் 11, 18
உத்தரப்பிரதேசம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19
உத்தரகண்ட்- ஏப்ரல் 11
மேற்கு வங்கம்- ஏப்ரல் 11, 18, 23, 29, மே 6, மே 12, மே 19

அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள்- ஏப்ரல் 11
சண்டீகர்- மே 19 தாத்ரா மற்றும் நாகர்
ஹவேலி- ஏப்ரல் 23
டாமன் மற்றும் டையு- ஏப்ரல் 23
டெல்லி- மே 12
புதுச்சேரி- ஏப்ரல் 18

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...