தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் எப்போது?!

Published:

sunilarora electioncommissioner - 2026

17ஆவது நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக இன்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர் சந்திப்பில் கூறியவற்றில் இருந்து…

மக்களவைத் தேர்தல் தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பும் நாட்களும் தொடங்கிவிட்டதால், தேர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்து இருக்கிறது. இதற்கான பிரச்சாரம் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் எப்போது நடக்கும் என்று தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18ம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது.

தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 19ம் தேதி தொடங்குகிறது.
மனுக்களை தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 26 தேதி.
வேட்பு மனுக்கள் பரிசீலனை மார்ச் 27 செய்யப்படும்.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் மார்ச் 29ம் தேதி.
வாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி செய்யப்படும்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

தமிழகம் மற்றும் புதுவைக்கும் ஏப்ரல் 18ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!

இந்த தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. முதற்கட்டதிலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. அதேபோல புதுச்சேரிக்கும் இதே நாளில் வாக்குப் பதிவு நடைபெறும்.

Related articles

Recent articles

spot_img