2019 மக்களவை தேர்தல்: தில்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி~!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, ஆணைஅய்ர்கள் அசோக் லவாசா, சுகில் சந்திரா பேட்டி அளித்தார்.

இதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது!

தேர்தல் தொடர்பாக சுனில் அரோரா தெரிவித்தவை..!

அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளோடும் விரிவாக ஆலோசனை நடத்தினோம் @ பல கட்டங்களாக இந்த ஆலோசனைகளை நடத்தினோம்

17வது மக்களவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது !

வேட்புமனு தாக்கல் நடைபெறும் கடைசி நாள்வரை வாக்காளர் பட்டியல்கள் திருத்தம் நடைபெறும்

பள்ளித் தேர்வுத் தேதி, அறுவடைக் காலம், நோன்பு காலம் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.

அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்த பின் தேர்தல் தேதி முடிவு.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் !

பூத் ஸ்லிப் மூலம் வாக்களிக்க முடியாது !

பூத் சிலிப்புகளை வைத்து இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாது!

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகளுக்கு தடை !

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபாட் எந்திரம் பயன்படுத்தப்படும் !

வாக்களிக்க தேர்தல் ஆணையம் தரும் பூத் ஸ்லிப் மட்டும் போதாது!

வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களில் ஒன்றை கட்டாயம் காட்ட வேண்டும்

நாடு முழுவதும் 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன

மக்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள் !

தேர்தலை பாதுகாப்பாக நடத்த சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்!

வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜி.பி.எஸ் பொருத்தப்படும்.

10 லட்சம் காவல்நிலையங்கள் தேர்தல் ஆணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளன!

மாற்றுத்திறனாளிகள், முதியோருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன!

பிரச்சனைக்குரிய வாக்குசாவடிகளில் சிசிடிவி பொருத்தப்படும்!

வாக்கு எந்திரத்தில் வேட்பாளர்களின் புகைப்படங்கள் இந்தமுறை இடம்பெறும்!

சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்!

பொதுமக்கள் புகார் அளிக்கும் விதமாக இலவச மொபைல் ஆப் அறிமுகப்படுத்தும்.

தேர்தல் தொடர்பான புகார்களை அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

தேர்தல் விதிமீறல்கள் குறித்து ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.

வாக்குபதிவு சம்பந்தமான புகார்களை அளிக்க 24 மணி நேரமும் இலவசமாக தொடர்பு கொள்ளும் எண்கள் அறிமுகப்படுத்தபடும்.

நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும்!

தேர்தல் விதிமுறை மீறல் குறித்து மக்களே புகார் அளிக்கலாம்!

தேர்தல் ஆணைய ஆப் மூலம் மக்கள் புகார் அளிக்கலாம் !

ஸ்மார்ட் போன் மூலம் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை அனுப்பலாம்!

பணம் தந்து செய்திகள் வெளியிடுவதைக் கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் குழு அமைக்கப்படும்.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவை உறுதி செய்யும் கருவி பயன்படுத்தப்படும்.

சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டது

அரசியல் விளம்பரங்களை இணையத்தில் வெளியிட அனுமதி பெற வேண்டும்

சமூக வலைத்தளமும் கண்காணிப்பில் கீழ் வரும்

சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்யவும் அனுமதி வாங்க வேண்டும்

நாடாளுமன்றத் தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன

அனைத்து பூத்களிலும் விவிபாட் பயன்படுத்தப்படும்

அனைத்து கட்டத்திலும் தேர்தல் நடவடிக்கை பார்வையாளர்கள் இருப்பார்கள்

மாற்றுத்திறனாளிகளுக்காக தனி ஆப் உருவாக்கப்படும்

சொத்து விவரங்களை வேட்பாளர்கள் முழுமையாக தாக்கல் செய்யாவிட்டால் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும்

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...