spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?YouTube இல் நீங்கள் அறியாத செட்டிங்ஸ்!

YouTube இல் நீங்கள் அறியாத செட்டிங்ஸ்!

- Advertisement -
05 May27 youtube e1539757713461
05 May27 youtube e1539757713461

ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியும் யூடியூப் வளர்ச்சிக்கு பக்கபலமாக உள்ளது. இன்று மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள ஒடிடி தளங்களின் முன்னோடியும் யூடியூப்தான். இலவசமாக வீடியோக்களை பார்க்க அனுமதிப்பது மட்டுமல்லாமல் , நாம் பதிவேற்றும் வீடியோ மூலம் வருமானத்தை ஈட்டவும் யூடியூப் வழிவகை செய்வதுதான் இதன் சிறப்பம்சம் . அந்த வகையில் பலரும் பயன்படுத்தும் யூடியூபின் சில ட்ரிக்ஸை பார்க்கலாம்.

முதலாவதாக யூடியூபில் வீடியோ பார்க்கும் நபர் ஒருவர் , குறிப்பிட்ட டியூரேஷனில் தான் ரசித்த காட்சிகளை தனது நண்பர்களுடன் பகிர விருப்புவார். அப்படி அனுப்பும் வீடியோக்கள் தொடக்கத்தில் இருந்தே பிளே ஆகும். பின்னர் வீடியோவை ஷேர் செய்துவிட்டு , குறிப்பிட்ட டியூரேஷனை பார்க்குமாறு நண்பருக்கு அறிவுறுத்துவார்.

இது நம்மில் பலருக்கும் நடந்திருக்கும். அந்த வகையில் நாம் ரசித்த காட்சிகள் இடம்பெற்ற டியூரேஷனையே நேரடியாக நண்பர்களை பிளே செய்ய வைக்க முடியும். அதற்காக ஒரு சிம்பிள் ட்ரிக்ஸ் உள்ளது.

முதலில் பகிர விரும்பும் வீடியோவின் share வசதிக்கு சென்று copy என்பதை தேர்வு செய்து, வீடியோ லிங்கை நகலெடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அதை யாருக்கு பகிர விரும்புகிறோம் அவரின் மெசேஜ் பாக்ஸில் paste செய்துவிட்டு பின்னர் லிங்கின் இறுதியில் &t=8m4s (m என்பது வீடியோவின் நிமிடங்களையும் s என்பது நொடிகளையும் குறிக்கிறது) கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் , நீங்க குறிப்பிட்ட நேரத்திலிருந்து உங்கள் நண்பருக்கு வீடியோ பிளே ஆகும்.

உதாரணமாக https://youtu.be/_9kmiIQPf_s=5m2s என கொடுக்க வேண்டும்

அடுத்ததாக turn on incognito , இன்காக்னிடோ (incognito ) என்பது ‘மறைநிலை’. நீங்கள் யூடியூப் தளத்தில் பார்க்கும் வீடியோக்கள் அனைத்தும் history பக்கத்தில் தானாகவே சேமிக்கப்படு. சிலருக்கு இது எரிச்சலூட்டுவதாக அமையலாம். இதனை தவிர்க்கவே இன்காக்னிடோ முறை பயன்படுத்தப்படுகிறது. இதனை ஆக்டிவேட் செய்ய உங்கள் யூடியூப் கணக்கு profile க்குள் செல்ல வேண்டும் . அங்கு manage your account என்பதற்கு கீழே உள்ள turn on incognito வசதியை கிளிக் செய்தால் நீங்கள் பார்க்கும் வீடியோக்கள் சேமிக்கப்படாது.

சிலர் 24 மணிநேரமும் யுடியூப்பில் வீடியோவை பார்த்துக்கொண்டே இருப்பாங்க.அவங்க எவ்வளவு நேரம் யூடியூபை பயன்படுத்துறாங்கன்னு தெரிஞ்சுக்க விரும்பினால், profile logo —>time watched என்ற வசதியை கிளிக் செய்து கடந்த வாரத்தில் எவ்வளவு நேரம் யூடியூபில் வீடியோ பார்க்க பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள முடியும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe