IMG 20180402 WA0003 e1522632674931 - 2026

சிங்கப்பூரின் தமிழ் மொழி மாத விழா தொடங்கியது. கவிஞர்களின் குரல் எழுப்பும் கவிமழை அமைப்பு, இதனையொட்டி அன்றாடம் யூ டியூப்பில் ஒர் உள்ளூர் கவிஞனின் புகழ் பாடும் தொகுப்பை வெளியிடுகிறது.

மறைந்த மூத்த கவிஞர் நா.பழனி வேலு பற்றிய வெளியீட்டை கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதி, வசந்தம் தொலைக் காட்சி-வானொலிப் பிரிவுகளின் செயல்மிகுத் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராமிடம் அளித்தார்.

தமிழை நேசிப்போம் – தமிழை வாசிப்போம் ! என்கிற உச்சக் குரல் முழக்கம் , சிங்கப்பூர் வசந்தம் ஒளி வழி நேற்று மாலை உலகெங்கும் ஒளி ஏறியது. இன்று முதல் அடுத்த ஒரு மாதத்தில் 50க்கு மேற்பட்ட அமைப்புகள் தமிழ் மணத்தோடு நிகழ்ச்சிகளை அரசாங்க ஆதரவோடு படைக்க விருக்கின்றன .
ஆடல் பாடல் நகைச்சுவை என 2 மணி நேர நிகழ்சசியைக் கன கச்சிதமாகப் படைத்தனர் வசந்தம் கலைஞர்கள்.

வழக்கம்போல் கார்த்திக் – ஷாலினி-ஜெய்னேஷ் மூவர் குழுவின் நெறிமுறை மிக அருமை. நேரடி ஒளிபரப்பில் தடுமாற்றம் இல்லாமல், இயற்கை குறையாமல், அநாயாசமான நகைச் சுவையுடன் கூடிய அவர்களின் பல்சுவை விருந்து நிகழ்ச்சிக்கு மதிப்புச் சேர்த்தது .
நடனங்கள், பாடல்கள் கடுமையான உழைப்பைப் புலப்படுத்தின .

ALSO READ:  திருக்கோயில்கள்-81 நூல் வெளியீடு!

“மன நிறைவோடு எங்கள் கலைஞர் குழுவினர் கடும் உழைப்பில் உருவாக்கிய நிகழ்ச்சி இது. தமிழ் மொழி மாதத்தில் பங்கு கொள்ளும் இந்த வாய்ப்பைப் பெருமையாகக் கொள்கிறோம்” என்று வசந்தத்தின் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராம் என்னிடம் பேசிக் கொண்டிருந்த போது குறிப்பிட்டார் . நியாயம் தானே!

தகவல்: ஏ.பி.ராமன், சிங்கப்பூர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending