
குவைத்தில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இந்தியர்கள் உள்பட 15 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
குவைத்தில் நடந்த பயங்கர சாலைவிபத்தில் 15-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள் என கூறப்படுகிறது.
இரண்டு பேருந்துகளில் தொழிலாளர்கள் பணி முடிந்து தங்களது இருப்பிடம் திரும்பிக் கொண்டிருந்தனர். எதிரெதிர் திசையில் வந்த இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது.



