மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும்; மாஸ்க் இல்லையெனில் துணியை முகக்கவம் போல் பயன்படுத்தலாம்: பேசும்போது சிலர் முகக் கவசத்தை கீழிறக்கியபடி பேசுகின்றனர்; அது தவறு. அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று, கொரோனா தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறினார்.
அதிகாரிகள் உட்பட யாராக இருந்தாலும் பெசும்போதுகூட முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று கூறியசி றப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் நோய் கட்டுப்பாடுப் பகுதிகளில் 25% பேர் முகக்கவசம் அணிவதில்லை… என்று தனது வருத்தத்தையும் வெளிப்படுத்தினார்.
திரு.வி.க.நகர், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் ஆகியவை சவாலான பகுதிகளாக உள்ளன என்றும், வரும் ஒரு வார காலத்திற்கு கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாலும் அச்சப்படத் தேவையில்லை என்றும் கொரோனா தடுப்புப் பிரிவு அதிகாரி ஜே.ராதாகிருஷ்ணன் கூறினார்.
கடைகளில் பணியாற்றுபவர்களையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது என்றும், வீடுகளுக்கு பொருட்கள் டெலிவரி செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும், கோயம்பேடு சந்தை தொழிலாளர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்!
அதிதீவிரமாக அதிக எண்ணிக்கையில் சோதனைகளை நடத்த திட்டம் இருப்பதாகவுஜ், அதிக சோதனைகளால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், அதனால் மக்கள் எவரும் அச்சப்படத் தேவை இல்லை என்றும் கொரோனா தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்தார்.