மதுரை மாவட்ட ஆலயங்களில் பக்தர்கள் இன்றி… மீனாட்சி திருக்கல்யாணம்!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் உள்ளூர் செய்திகள் சற்றுமுன் மதுரை லைஃப் ஸ்டைல்
madurai meenakshi sundareswarr kalyanam15
madurai meenakshi sundareswarr kalyanam15 File picture

மதுரை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தர்கள் இன்றி மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

மதுரை, மதுரை மாவட்டத்தில் இந்த ஆண்டு பக்தர்கள் பல லட்சம் பேர் அனுமதியின்றி ஆலயங்களில் மே.4ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெறுகிறது.

மதுரையில் ஆண்டுதோறும் மீனாட்சி திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் அழகர் ஆற்றில் இறங்குதல் வைபவமும் பல லட்சம் பேர் தரிசிக்க நடைபெறும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா தொற்று நோய் தாக்கம் காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் சிவ ஆலயங்களில் பக்தர்கள் அனுமதியின்றி திருக்கல்யாணம் நடத்த அரசு உத்தரவிட்டது.

kallalagar2
kallalagar2

இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை காலை அனைத்து கோயில்களிலும் கோயில் அர்ச்சகர்களை மட்டும் வைத்து திருமணம் நடத்தப்படும் என்றும், அதை பொதுமக்கள் தொலைக்காட்சிகள் மூலம் தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆண்டுதான் அழகர் ஆற்றில் இறங்காமல், மண்டூக ரிஷிக்கு மோட்சம் கொடுக்கும் நிகழ்வு மட்டும் பக்தர்கள் இன்றி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

  • செய்தியாளர் : ரவிசந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.