தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் சுந்தர் தயாளன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் எந்தெந்த கடைகள் திறக்கலாம் எந்த கடைகள் திறக்க கூடாது என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில் குளிரூட்டப்பட்ட நகைக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், முடித்திருத்தும் நிலையங்கள், பெரிய மால்கள் மற்றும் வணிக வளாகங்கள் தேனீர் கடைகள் பொதுத்துறை செயல்பாட்டில் வரும் கடைகள் ஆகிவை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து உணவகங்களிலும் மற்றும் பேக்கரிகளில் பார்சல் மட்டும் வழங்க அனுமதிக்கப்படுகிறது.
அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
கம்ப்யூட்டர் சென்டர்கள் 50 சதவீத பணியாளர்கள் கொண்டு இயங்கலாம்.
அனைத்து துணிக்கடைகள் ஹார்டுவேர் சிமெண்ட் கட்டுமான பொருட்கள் கடைகள், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் நிலையங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், மின் மோட்டார் , கண்ணாடி விற்பனை செய்யும் கடைகள், பழுது நீக்குதல் உள்ளிட்ட கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படுகிறது.
அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் அரசால் அமைக்கப்பட்ட தனி நபர் இடைவெளியை பின்பற்றி போதுமான கிருமி நாசினிகளை பயன்படுத்தியும் அரசால் வெளியிடப்பட்டுள்ள நிலையான செயல்பாட்டை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.