அறந்தாங்கியில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

உள்ளூர் செய்திகள் திருச்சி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே ஸ்டேசன் அருகில் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது

அறந்தாங்கி நகரில் தொடர்ந்து துாய்மை பணிகளை செய்து வரும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பொருப்பாளர் ரகுபதி தலைமை வகித்து அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் முன்னிலை வகித்தார். 250 பணியாளர்களுக்கு தலா ரூ.500 மதிப்பிலான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் சுமதி நிர்வாகிகள் பெருங்காடு சுப்ரமணியன்,ஒன்றிய செயலாளர் பொன்கணேசன்,நகர செயலாளர் ஆனந்த் வின்சென்ட்,அய்யப்பன் முன்னாள்கவுன்சிலர்கள் காசிநாதன்,துளசிராமன்,ஆறுமுகம்,,விமல், தலைமை கழக பேச்சாளர் செல்வம் கைராசிபுருசோத்தமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

dmk railway
dmk railway

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.