madurai ration shop 3
madurai ration shop 3

கோடைக்காலம் என்பதால், குடையுடன் வந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நியாய விலைக்கடைகளில் பொருள்களை பெற்றுச் செல்லுங்கள் என்கிறார் மதுரை ஆட்சியர். மதுரை ஆட்சியர் பெயரிலான பேஸ்புக் பக்கத்தில் அந்த வேண்டுகோள் காணக்கிடைக்கிறது.

கோடை காலமாக உள்ளதால் குடைகளுடன் நியாய விலைக் கடையில் பொருட்களை பெற்றுச் செல்ல பொதுமக்களை மதுரை மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வாங்க நாள் மற்றும் நேரம் போன்ற விவரங்கள் அடங்கிய டோக்கன் வீடு தோறும் சென்று பணியாளர்கள் மூலம் வழங்கியுள்ளது.

madurai ration shop 2
madurai ration shop 2

இன்று மதுரை மாவட்டத்தில் நியாய விலைக் கடைக்கு வந்த பொதுமக்கள் குடைகளுடன் வந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுச் சென்றனர்… என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது.

கூடுதல் தகவல் மற்றும் உதவிகளுக்கு 24×7 மதுரை மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077, 0452 2546160, 95971 76061 – எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

முன்னதாக நேற்று மதுரையின் சில பகுதிகளில் ரேஷன் கடை பணியாளர்கள் டோக்கனை வழங்காமல், கடைகளுக்கு வரச் சொல்லி டோக்கன் கொடுத்தனர் என்று அப்பகுதியினரின் புகார்களை நாம் நம் செய்தித் தளத்தில் பதிவு செய்திருந்தோம். இதன் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு, இன்று அம்மக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் விநியோகிக்கப் பட்டுள்ளது. இதற்காக அப்பகுதி மக்கள் நமக்கு நன்றி தெரிவித்தனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
madurai ration shop 1
madurai ration shop 1

கொரோனா காலத்தில்… அரசு உத்தரவை மதிக்காத மதுரை ரேசன் கடை பணியாளர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending