கேரளாவில் மத்திய அரசை கண்டித்து தொழிற் சங்கங்கள் நடத்தும் முழு வேலை நிறுத்தம்.
கேரளாவிற்குள் லாரிகளை கொண்டு செல்ல முடியாமல் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு
மத்திய அரசு அலுவலகங்களில் பகுதி நேர பணியாளர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவிற்கு கேரள மாநிலத்தில் உள்ள தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவே மத்திய அரசை கண்டித்து நேற்று இரவு 12 மணி முதல் இன்று இரவு 12 மணி வரை 24 மணி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் நேற்று இரவில் இருந்தே ஏராளமான லாரிகள் கேரளாவிற்குள் செல்ல முடியாமல் புளியரை பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் புளியரை சோதனை சாவடி வெறிச்சோடி காணப்பட்டது. தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் காய்கறி சந்தையில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு காய்கறிகளை ஏற்றி செல்வது வழக்கம்.
இன்று நடைபெறும் வேலை நிறுத்தத்தால் லாரிகளை சந்தைப்பகுதிகளில் நிறுத்தி வைத்துள்ளனர் தென்காசியில் இருந்து கேரளா செல்லும் தமிழக கேரள பேரூந்துகள் எதுவும் இயக்கப்படவில்லை. இதனால் கேரளாவிற்கு சரக்குகளை எற்றி செல்லும் லாரி ஓட்டுனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்
மத்திய அரசை கண்டித்து வேலை நிறுத்தம் லாரி ஓட்டுனர்கள் தவிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari