காவிரி விவகாரத்தில் திருப்பம்: அதிர்ச்சி அளித்த உச்ச நீதிமன்றம்

Published:

supreme court of india - 2026

புதுதில்லி: காவிரி மேலாண்மை வாரியம் குறித்து சொல்லவில்லை  என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் – மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளது.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் 9ம் தேதி விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இதனை அறிவித்தது.

மேலும் காவிரி தீர்ப்பில் செயல் திட்டம் தான் குறிப்பிடப் பட்டுள்ளது, மேலாண்மை வாரியம் என்று குறிப்பிட வில்லை என நீதிபதி அறிவித்து, தமிழகத்துக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இருப்பினும் திட்டம் என்பதில் அனைத்தும் அடங்கும் என்பதால், பிரச்சினையை தீர்க்கக் கூடிய எதையும் இந்த ஸ்கீம் என்பதில் அடக்கலாம். எனவே அதில் வாரியமும் அடங்கும் என்றும் வாரியம் மட்டுமே இல்லை என்றும் நீதிபதி குறிப்பிட்டதாக தகவல் வெளியானது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img