
கோவை விழாவின் ஒரு பகுதியாக ஒவியக் கண்காட்சி கோவை தனியார் அரங்கில் நடைபெற்றது.
கோவை விழாவின் ஒரு பகுதியாக அட்லஸ் வலி நிவாரண மையம் மற்றும் பிச்சரிங் பெயின்ட் சார்பாக ஏற்கெனவே ஒவியப் போட்டி ஒன்று நடத்தப் பட்டது. அதில், பல்வேறு பள்ளிகளில் இருந்து 5000 பேர் கலந்து கொண்டனர்
அதன் பின்னர் அந்தப் பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் (குழந்தைகள்) கோவை புரூக் பீல்டு மாலில் நடைபெற்ற ஒவியப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்
இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகையை அட்லஸ் வலி நிவாரண மையம் சார்பில் dr.செந்தில், விஜயானந்த் மற்றும் கோவை விழா கமிட்டி Mr. தீபேந்தர் சிங் விஷ்ணு பிரபாகர் ஆகியோர் வழங்கினர்.