கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கல்லூரியில் களைகட்டிய பொங்கல் விழா!

உரத்த சிந்தனை கோவை சற்றுமுன் நிகழ்ச்சிகள்
kovai college pongal - 2026

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பொங்கல் விழா களைகட்டியது.

இந்தப் பொங்கல் விழாவில் பாரம்பரிய கலைகளை நினைவுகூரும் வகையில், ஆடிப்பாடி, மாணவர்கள் பொங்கல் வைத்து கொண்டாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

கோவை நவ இந்தியாஸ் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தப் பொங்கல் விழா நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் துறை வாரியாக பொங்கல் வைத்து கொண்டாடினர்.

தொடர்ந்து பாரம்பரிய முறைப்படி மாணவிகள் சேலையும், மாணவர்கள் வேட்டி அணிந்தும் வந்திருந்தனர். வண்ணக் கோலங்கள் வரைந்தும், பானைகளில் பொங்கல் வைத்தும் கொண்டாடினர்.

இதைத் தொடர்ந்து மாணவ, மாணவிகள் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் பொங்கல் விழாவை கோலகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா.. காணொளித் தொகுப்பு…

https://youtu.be/9aKHfI6H01o

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.