karur bjp meeting senthilnathan - 2026

திராவிட மாடல் கொடுங்கோல் ஆட்சியின் பிடியில் இருந்து தமிழகத்தை மீட்க கரூர் பாஜக., சபதம்!

திருச்சி அரசியல் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
karur bjp meeting senthilnathan - 2026

பாரதிய ஜனதா கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகள் மாநாடு & தேர்தல் பயிலரங்கம் தரகம்பட்டி ஶ்ரீ செந்தில்முருகன் மஹாலில் நடைபெற்றது.

பா.ஜ.க கரூர் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி அமைப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட செயலாளருமான காவேரி மோகன்ராஜ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக நாமக்கல் கரூர் க்ளெஸ்ட்டர் இணை பொறுப்பாளரும் நாமக்கல் கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவருமான N.P.சத்தியமூர்த்தி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி முன்னாள் பொறுப்பாளரும் பா.ஜ.க கரூர் மாவட்ட துணை தலைவருமான P.R.ஆறுமுகம், சட்டமன்ற பொறுப்பாளர் N.முருகானந்தம் ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மண்டல் தலைவர்கள் ஸ்ரீவிகான் ரமேஷ், கோபிநாத், சுரேஷ், பாலுச்சாமி, சிந்தியா, லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

மாவட்ட தலைவர் செந்தில்நாதன் பேசுகையில் “கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் யாரை தேசிய ஜனநாயக கூட்டணி கை காட்டுகிறதோ அவரை வெற்றிபெற செய்து சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்க செய்யும் செயலை 100% பாரதிய ஜனதா கட்சி செய்யும்.

மேலும் கிராமப் பகுதிகள் நிறைந்த இந்த தொகுதியில் அதிக அளவில் கஞ்சா/போதை உண்டாக்கும் பொருட்கள் விற்பனை தாராளமாக நடக்கிறது இது இளைய சமுதாயத்தினை பெரிதும் பாதிக்கிறது,

அரசு ஊழியர்கள் பலர் பொதுமக்களிடம் கையூட்டு பெற்று கைதாவது அடிக்கடி நடக்கிறது இவைகள் இனிவரும் காலங்களில் நடக்காமல் அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்காமல் பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் தவறினால்
பாரதிய ஜனதா கட்சி மக்களுக்காக போராடும் என்று சூளுரைத்தார்.

மாவட்ட செயலாளர் காவேரி மோகன்ராஜ் பேசுகையில், இந்த சிறப்பு வாய்ந்த தொகுதி நிர்வாகிகள் மாநாட்டில் மாவட்ட தலைவர் அவர்கள் கூறியது போல் தொகுதியில் உள்ள 260 கிளைகளையும் வலுப்படுத்தி அனைவரும் இணைந்து இந்த தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றியினை மாவட்ட தலைவர் கையில் கொடுக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்,
அடுத்த 4 மாதங்கள் சட்டமன்றத்தில் உள்ள நம் அனைவரும் ஊழலில் ஊறிய இந்த திராவிட மாடல் ஆட்சியினை ஒழித்து பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களின் நல்லாட்சி தமிழகத்தில் மலர களப்பணி ஆற்ற வேண்டும் என்று கூறினார்.

மாநாட்டில் 1)பொண்ணனை ஏரி சிறப்பு திட்டத்தினை உடனடியாக வகுத்து அதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் 2)தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காகவும்-இந்த போலி சமூக நீதி / திராவிட மாடல் அரசின் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து தமிழகத்தினை மீட்க கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள நிர்வாகிகள் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும் – என்ற இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் தங்களது கிளைகளில் 100 வாக்குகளுக்கு மேல் பெற்றுக்கொடுத்த கிளை தலைவர்கள் அந்தந்த கிளைகளின் மண்டல் தலைவர்கள் மற்றும் கிருஷ்ணராயபுரம் பார் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்றுள்ள வழக்கறிஞர் வடிவேல் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

மாநில பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நன்றி கூறினார். பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற தொகுதிக்குற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் மாணிக்கம்மாள், கற்பக வள்ளி, முருகானந்தம், ரெங்கநாதன், யுவராஜ், இளைஞரணி மாவட்ட பொதுச்செயலாளர் ராஜதுரை, மாவட்ட இளைஞரணி துணை தலைவர் குமரேசன் விவசாய அணி மாவட்ட துணை தலைவர்கள் கலா மணி வேல்முருகன், செந்தில்குமார், மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், அணி பிரிவு மாவட்ட நிர்வாகிகள்,
கிளை தலைவர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், BLA-2 பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.