கோவையில் நடைபெற்ற பழைய கார் கண்காட்சி!

உள்ளூர் செய்திகள் கோவை சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
kovai heritage car - 2026

கோவை விழாவின் ஒரு பகுதியாக பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி தனியார் மாலில் நடைபெற்றது.

கோவை விழாவின் ஒரு பகுதியாக தனியார் மாலில் பழங்காலத்து பழைய கார் மற்றும் பைக் கண்காட்சி நடைபெற்றது

இந்தக் கண்காட்சியை ஆர்எச்ஆர் குழு தலைவர் ரத்னவேலு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்
மேலும் இதில் பழைமை வாய்ந்த கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுத்து நின்றன. இந்தக் கார்களின் பெயர்கள் மோர்ஸ் 8 சீரியஸ்-1941, புல்மேன் மெர்டிஸ்பென்ஸ் -1974, போர்டு ஜீப் -1958,
அஸ்டன்-7 -1947, மோரிஸ் மைனர் – 1951, ஓல்ஸ்வேகன் பீட்டல்-1957, மற்றும் போர்டு-A-1929 மற்றும் பைக் எஸ் டி ஜாவா மற்றும் 3 டயர் கார் மெசர்ஸ்மித் -1955 மற்றும் வில்லியம்ஸ் ஜீப் போன்ற பல வகையான பழங்காலத்து கார் வகைகள் அணிவகுத்து நின்றன

இந்நிகழ்ச்சியில் பிரதிப் கிருஷ்ணராஜ், பிரசன்னா மற்றும் புரோசோன் பிரவின் மித்தல் ஆகியோர் கலந்துகொண்டு பார்வையிட்டனர்

ஏராளமான பொதுமக்களும் இந்தக் கண்காட்சியை பார்வையிட்டு சென்றனர்.

இந்தக் கண்காட்சியில் 25 கார்கள் 14 பைக்குகள் இடம்பெற்றுள்ளன. 1929ம் வருட போர்ட் கார் தான் மிகப் பழைமையான கார். பழைய கார் உரிமையாளர்கள் கோவையில் உள்ளனர். அவர்கள் அடுத்த வருடம் மேலும் தங்கள் பழைய கார்களை கண்காட்சிக்கு வைத்து இதனை சிறப்பாக்க வேண்டும் என்றார் நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.வசந்த்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.