மதுரை – செங்கோட்டை – மதுரை நிறுத்தப்பட்ட ரயில் மீண்டும் இயக்கம்..

Published:

மதுரை – செங்கோட்டை – மதுரை நிலையங்களுக்கு இடையே பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பகல்நேர ரயில்
01/07/2022 முதல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் விரைவு ரயில் கட்டணத்தில் இயக்கப்படுகிறது.

அதன்படி வண்டி எண் 06664
செங்கோட்டை – மதுரை சிறப்பு
விரைவு ரயில் செங்கோட்டையில் இருந்து காலை 11:50 மணிக்குப் புறப்பட்டு மதுரை ரயில் நிலையத்திற்கு மதியம் 03:35 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06663 மதுரை – செங்கோட்டை சிறப்பு
விரைவு ரயில் மதுரையிலிருந்து
காலை 11:30 மணிக்கு புறப்பட்டு
செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு மதியம் 03.20 மணிக்கு வந்தடையும்.

இந்த ரயில்களில் 12 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் 2 சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.

இந்த தினசரி சிறப்பு விரைவு ரயில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்பகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.முன்பு இயக்க ப்பட்ட பயணிகள் ரயில் அதே வேகத்தில் அதே பயணநேரத்தில் அனைத்து ஸ்டேஸ்டன்களிலும் நின்று செல்லும்.ஆனால்விரைவு ரயில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
FB IMG 1656068579218 - 2026
FB IMG 1656073949277 - 2026
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img