
- கோவையில் 10ஆம் வகுப்பு மாணவனை காவல் துறையினர் தாக்கிய சம்பவம்,
- 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய கோவை காவல் ஆணையருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு.
சாத்தான்குளம் சம்பவத்தை போன்று கோவையில் இரவு டிபன் கடை அடைப்பதற்கு தாமதமான நிலையில் போலீசார் டிபன் கடையை மூடுவதற்கு அவசரபடுத்தினார்கள்.
அப்போது அந்தக் கடைக்காரப் பெண்மணியிடம் போலீஸார் மிரட்டிக் கொண்டிருந்தனர். ஆனால், அந்தப் பெண்மணியை மிகவும் கேவலமாக போலீசார் பேசியதால், கோபம் கொண்ட அவரது மகனான பள்ளி மாணவர், தன் தாயை ஏன் இப்படி திட்டுகிறீர்கள் என்று கூறி, போலீஸ்காரரின் பைக் சாவியைப் பிடித்துள்ளார்.
இதை அடுத்து கோபம் கொண்ட போலீசார் அந்த மாணவரை அங்கேயே வைத்து அடித்து உதைத்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது
இந்நிலையில் அந்த மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது