- பெற்றோரை ஒருமையில் திட்டிய போலீஸ் எஸ்.ஐ – கைகலப்பில் ஈடுபட்ட பள்ளி மாணவர்
- மாணவரை அடித்து உதைத்த போலீசார் – வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பு
கோவை ரத்தினபுரி சாஸ்திரி வீதியில் தள்ளுவண்டி டிபன் கடை நடத்தி வருபவர் வேல்மயில். இவர் மனைவி மற்றும் பள்ளியில் படிக்கும் மகனுடன் இரவு டிபன் கடை நடத்தி வந்துள்ளார்.
கடந்த ஜூன் 19ம் தேதி இரவு 8 மணிக்கு மேல் தள்ளுவண்டியில் கடை நடத்திய நிலையில், ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்லமணி கடையை உடனடியாக மூடும்படி அறிவுறுத்தினார்.
ஆனால் வேல்மணியும் அவரது மனைவியும் கடையை எடுக்காமல், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்களை ஒருமையில் பேசிய உதவி ஆய்வாளர் செல்லமணி, அவர்களின் செல்போனைப் பிடுங்கிக் கொண்டு உடனடியாகக் கடையை காலி பண்ண வேண்டும் என எச்சரித்தார்.
அப்போது தனது பெற்றோரை ஒருமையில் காவல்துறையினர் பேசுவதைக் கண்டு ஆவேசமடைந்த பள்ளி மாணவர், உதவி ஆய்வாளர் செல்லமணியின் இருசக்கர வாகன சாவியைப் பிடுங்கிக் கொண்டு கைகலப்பில் ஈடுபட்டார்.
இதனையடுத்து, போலீசார் சாவியைப் பிடுங்கிய பள்ளி மாணவரை லத்தியால் தாக்கினர். காவல்துறையினர் தங்களது மகனை தாக்குவதைக் கண்டு கலங்கிய பெற்றோர் காவல்துறையினரைத் தடுத்து, மகனைத் தாக்க வேண்டாம் எனக் கெஞ்சினர்.
- கே.சி. சாமி, பொள்ளாச்சி