பாஜக., நிர்வாகி வீடு சென்று மிரட்டிய திமுக., எம்.எல்.ஏ.,! வழக்கம்போல் சிசிடிவி.,யில் சிக்கி…

அடடே... அப்படியா? சற்றுமுன் மதுரை
dmk mla
dmk mla
  • பாஜக நிர்வாகியின் வீட்டிற்கு நேரில் சென்று மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ!.
  • இணையத்தில் வைரலாகும் பரபரப்பு சிசிடிவி வீடியோ காட்சிகள்

மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தியின் ஊழல்களைக் குறித்து பேசிய பாஜக இளைஞரணி நிர்வாகி சங்கரபாண்டியன் வீட்டிற்கு நேரில் சென்று மூர்த்தி மிரட்டிய சிசிடிவி காட்சிகளை பாஜகவினர் வெளியிட்டுள்ளனர்

பாஜக நிர்வாகி சங்கரபாண்டியன் முரசொலி மூலபத்திரம் கேட்டு வெளிநாடுகளில் கைகளில் பதாகை ஏந்தியும், மதுரை வந்த திமுக தலைவர் ஸ்டாலினி்ன் காரை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சமூகத் தளங்களில் பரவலாக விமர்சிக்கப் பட்டு வருகிறது. இந்நேரம் ஜெயலலிதா இருந்திருந்தால், மூர்த்தி கம்பி எண்ணிக் கொண்டிருப்பார் என்று சிலர் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திமுக., எதிர்ப்பாளரும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்.,வாக இருப்பவருமான மாரிதாஸ் தமது பக்கத்தில் எழுதி இருப்பது…

ஊழல் செய்ததை பற்றி எழுதியதற்கு மதுரை பாஜக நிர்வாகி சங்கரபாண்டி, அவர் மனைவியை அவர் வீட்டிற்கே சென்று திமுக MLA மூர்த்தி அசிங்கமாகப் பேசி, செருப்பால் அடிக்க முயற்சி!

இந்த மூர்த்தி முன்பு பட்டியலின மக்களை ஜாதி சொல்லி அசிங்கமாக மிக அருவருப்பாக பேசியவன்,பலரை மிரட்டிய வழக்கும் உண்டு. பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தியது உண்டு. ஒரு முழு ஜாதிவெறி பிடித்த ரவுடி.

இது தான் திமுக நிர்வாகிகள் உண்மை முகம். ஆனால் ஊரை ஏமாற்றி திமுக தன் உண்மை வரலாறை மறைத்து மக்கள் மறதியை பயன்படுத்துகிறது.

தொற்று நோய் பரவும் காலத்தில் கூட திமுக ரவுடித்தனம் குறையவில்லை! மக்கள் மறதி தான் பெரிய பிரச்சனை.

இவன் போன்றவர்கள் எல்லாம் என்ன தகுதி இருக்கு மக்கள் நாம் வோட்டு போடுவதற்கு! குறைந்தபட்ச தகுதி கூட இல்லாத ரவுடிகள் வேட்பாளர்களாக நிறுத்துவது எந்த தைரியத்தில்? மக்கள் நம்மை முட்டாள் ஆக்க முடியும் என்ற தைரியத்தில்.

-மாரிதாஸ்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.