வாடகைக்கு விடாததால் கோயில் கட்டடங்கள் பாழாகும் அபாயம்!

சற்றுமுன் தமிழகம் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
temple building without rent
temple building without rent

மதுரை அண்ணாநகர் பெருமாள் கோயில் ஓன்றில் கோயில் முன்பாக கட்டப்பட்டுள்ள கடைகளை, கோயில் நிர்வாகமானது உரிய காலத்தில் வாடகைக்கு விடாததால், கட்டிடங்கள் பாழாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக பக்தர்கள் பலர் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை அண்ணாநகர் ஆலமரம் பஸ் நிறுத்தம் அருகே அமைந்துள்ளது சேவுகப் பெருமாள் அய்யனார் திருக்கோயில். இக் கோயிலானது குடமுழுக்கு பிறகு வெங்கிடஜலபதி பெருமாள் கோயில் என, அழைக்கப்படுகிறது.

temple building without rent
temple building without rent

இக் கோயிலானது, மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள மதனகோபால் பெருமாள் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இக் கோயில் முன்பாக சுமார் 50-ககு மேற்பட்ட கடைகள், அறநிலையத்துறையினரால் கட்டப்பட்டு, வாடைகைகக்கு விடப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலான கடைகள் சரியாக ஏலம் போகததால், கடைகள் பல தரை மற்றும் மேல்தளத்தில் பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், அப் பகுதியில் குடியிருப்போர் தாங்கள் வளர்க்கும் மாடுகளை, தரை தளத்தில் வாடைகைக்கு விடாமல், பூட்டிய நிலையில் உள்ள கடைகள் முன்பாக மாடுகளை கட்டி பால் கறந்து விற்பனை செய்து வருகின்றனர்.

temple building without rent
temple building without rent

மாடுகள் வரிசையாக தரைத் தளத்தில் உள்ள கடைகளில் கட்டப்படுவதால், கடைகளின் சுவார்கள் சேதமடைந்து வருகிறதாம். இது குறித்து மதுரை இந்து சமய அறநிலையத்துறை அலுலர்களிடம் பக்தர்கள் பலர் புகாரும் அளித்துள்ளனர்.

இருந்தபோதிலும், அப் பகுதி மக்கள் தினசரி காலை நேரங்களில் கோயில் முன்பாக உள்ள கடைகளின் கதவுகளில் மாடுகள் கட்டி பால் கறந்து விற்பனை செய்யும் தொழிலானது, தடபுடலாக நடந்து வருகிறது.

ஆகவே, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் திடீரென ஆய்வு செய்து, கோயில் கடைகளின் கட்டிடங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க மதுரை அண்ணாநகர் பகுதி சமூக ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.