திமுகவினர் 100 பேருடன் பிறந்தநாள்! 50 பேர் மீது வழக்கு பதிவு!

Published:

dmk

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராக இருப்பவர் குணசேகரன். திமுகவின் பொதுக்குழு உறுப்பினராக உள்ள இவர் முழு பொது முடக்கம் அமலில் இருக்கும் போதே கடந்த 19ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி உள்ளார்.

மாந்தோப்பில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் உடன் இவர் பிறந்த நாளை கொண்டாடியதாக தெரிகிறது. இதில் திமுக நிர்வாகிகள், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 5 அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தகவலறிந்த போலீஸார் கும்மிடி பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் குணசேகரன் உட்பட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

dmk

இந்த விழாவில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் 5 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மேலும் விழாவில் கலந்து கொண்ட பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. திமுக பொதுக்குழு உறுப்பினராக உள்ள குணசேகரன் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு செம்மரக்கடத்தல் வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Related articles

Recent articles

spot_img